இந்தியா

தெலுங்கானாவில் 37 வகையான புதிய மதுபானங்கள் அறிமுகமாகிறது- மது பிரியர்கள் உற்சாகம்

Published On 2025-03-18 10:10 IST   |   Update On 2025-03-18 10:20:00 IST
  • கடந்த மாதம் மது பானங்கள் கழகம் புதிய சப்ளையர்களிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பையும் வெளியிட்டது.
  • மதுபானங்களின் அடிப்படை விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

திருப்பதி:

தெலுங்கானாவில் உள்ள மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல. ஒரே நேரத்தில் 37 புதிய வகை மதுபானங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன.

இதற்காக, கடந்த மாதம் மது பானங்கள் கழகம் புதிய சப்ளையர்களிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பையும் வெளியிட்டது.

அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடுவிற்குள் மொத்தம் 37 பிராண்டுகள் விண்ணப்பித்தன. இவற்றில் 15 வெளிநாட்டு மதுபான பிராண்டுகள், மேலும் 15 உள்நாட்டு பிராண்டுகள், மேலும் 7 பீர் வகைகள் புதிதாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மதுபானங்களின் அடிப்படை விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசாங்கம் ஏற்கனவே பீர் விலையை உயர்த்தியுள்ளது.

நடப்பு பட்ஜெட்டில் கலால் துறையிலிருந்து ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ள நிலையில், அடுத்த பட்ஜெட்டில் வருவாய் இலக்கு ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்ந்தால், மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News