இந்தியா

அடிக்கடி சண்டை போட்டதால் டி.வி.பார்த்து மனைவியை கொன்ற வாலிபர்- உடலை சாலையில் வீசி நாடகம்

Published On 2025-03-18 10:19 IST   |   Update On 2025-03-18 10:19:00 IST
  • கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை அடித்து கொலை செய்தார்.
  • போலீசார் சந்தேகத்தின் பேரில் பிரதீப் குர்ஜாரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

மத்திய பிரதேச மாநிலம் போபால் அடுத்த குவாலியரை சேர்ந்தவர் பிரதீப் குர்ஜார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

இதனால் தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். டி.வி. நாடகங்களில் வரும் குற்ற சம்பவங்களை பார்த்து அதன்படி மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை அடித்து கொலை செய்தார்.

பின்னர் மனைவியின் பிணத்தை தனது பைக்கில் எடுத்து சென்று தேசிய நெடுஞ்சாலையில் வீசினார். அந்த வழியாக வந்த வாகனங்கள் பிணத்தின் மீது ஏறி இறங்கி சென்றதால் உடல் சிதைந்தது.

இதுகுறித்து பிரதீப் குர்ஜார் கம்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தானும் தனது மனைவியும் பைக்கில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது. இதில் எனது மனைவி இறந்து விட்டார். எனக்கு காயங்கள் ஏற்பட்டது என போலீசாரிடம் தெரிவித்தார்.

போலீசார் விபத்து என வழக்கு பதிவு செய்தனர். பிரதீப் குர்ஜாரின் மனைவிக்கு இறுதி சடங்குகள் நடந்த போது அவரது உறவினர்கள் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்து வந்தார். இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர்.

போலீசார் சந்தேகத்தின் பேரில் பிரதீப் குர்ஜாரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மனைவியை கொலை செய்து விபத்து நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரதீப் குர்ஜாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News