இந்தியா
மணிப்பூர் விவகாரம்: 'நரேந்திர மோடி Not Prime Minister. அவர் Picnic Minister' - விளாசிய வைகோ
- மணிப்பூர் மாநிலத்தில் பலாத்காரம், படுகொலைகள் என அனைத்து கொடுமைகளும் அரங்கேறுகின்றன.
- மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா?
மாநிலங்களவையில் எம்.பி. வைகோ பேசியதாவது:
மணிப்பூர் நிலவரம் பற்றி இங்கே ஆழமான விவாதம் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பலாத்காரம், படுகொலைகள் என அனைத்து கொடுமைகளும் அரங்கேறுகின்றன.
எங்களுக்கு உள்ள மில்லியன் டாலர் கேள்வியே பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்வதைத் தவிர வேறு என்ன வேலை இருக்கிறது?
நரேந்திர மோடி Not Prime Minister. அவர் Picnic Minister. ஒவ்வொரு நாடாக செல்கிற நரேந்திர மோடியால் மணிப்பூர் மாநிலத்துக்கு ஏன் செல்ல முடியவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா என்று வைகோ பேசினார்.
இதை சபை குறிப்பில் இருந்து நீக்குவேன் என்று மாநிலங்களவை துணைத்தலைவர் கூறினார்.