பட்நாவிஸை அவுரங்கசீப் உடன் ஒப்பிட்ட காங்கிரஸ் தலைவர்: சிறுபிள்ளைத்தனம் என பாஜக கடும் கண்டனம்
- இன்று, மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அவுங்கரசீப்புக்கு இணையாக கொடுங்கோல் ஆட்சி செய்கிறார்.
- மதம் தொடர்பான விசயங்களுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்கசீப்பின் கல்லறையை அப்புறப்படுத்த வேண்டும் என சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பெரும் புயலை கிளப்பி வருகிறது. இதனால் அவுரங்கசீப் கல்லைறை இருக்கும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை காண்பித்துதான் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலவைர் ஹர்ஷ்வர்தன் சப்கால், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸை அவுரங்கசீப் உடன் ஒப்பிட்டதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது "அவுரங்கசீப் கொடுங்கோல் ஆட்சி செய்தார். இன்று, மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அவுங்கரசீப்புக்கு இணையாக கொடுங்கோல் ஆட்சி செய்கிறார். மதம் தொடர்பான விசயங்களுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருக்கிறார். ஆனால், சர்பாஞ்ச் சந்தோஷ் தேஷ்முக் கொலை போன்ற வழக்குகளில் எதுவுமே செய்யவில்லை" எனக் கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது ஒப்பீடு சிறுபிள்ளைத்தனமானது எனத் தெரிவித்துள்ளது.
பாஜக எம்.பி. பகவத் கராத் இது தொடர்பாக கூறுகையில் "இது மிகவும் தவறானது, கண்டிக்கத்தக்கது. பட்நாவிஸ் மாநிலத்திற்கான நல்ல விசயங்களை செய்து வருகிறார். அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. விக்ஷித் மகாராஷ்டிரா நோக்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறார். காங்கிஸ் தலைவரின் ஒப்பீடு சிறுபிள்ளைத்தனமானது.
தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் ஒப்பீடு நல்லதல்ல என கருத்து தெரிவித்துள்ளனர்.