இந்தியா
நியூசிலாந்தில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள்: நியூசிலாந்து பிரதமரிடம் கவலை தெரிவித்த பிரதமர் மோடி
- நியூசிலாந்தில் சில சட்டவிரோத சக்திகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து பிரதமர் மோடி கவலை.
- பாதுகாப்பு, கல்வி, சுற்றுச்சழூல், வேளாண்மை, விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஒப்பந்தம்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, கல்வி, சுற்றுச்சழூல், வேளாண்மை, விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த சந்திப்பின்போது நியூசிலாந்தில் சில சட்டவிரோத சக்திகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்த இந்தியாவின் கவலையை பிரதமர் மோடி கிறிஸ்டோபர் லக்சனிடம் தெரிவித்தார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிப்பதில் இரு தலைவர்களும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்படும் என கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.