இந்தியா

பல மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த உத்தரப் பிரதேச அரசுக் கல்லூரி பேராசிரியர்.. 20 வருடமாக நடந்த கொடூரம்

Published On 2025-03-17 14:42 IST   |   Update On 2025-03-17 14:42:00 IST
  • பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.
  • பரீட்சையில் நல்ல கிரேட் தருவது, வேலை வாங்கி தருவது ஆகிய ஆசைகளை காட்டி பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் இந்த செயல்களில் 20 வருடமாக ஈடுபட்டு வந்தார்.

உத்தரப் பிரதேசத்தில் 59 வயதான கல்லூரி அரசுக்கல்லூரி பேராசிரியர் பல மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக (HOD) ஆக உள்ளவர் ரஜ்னீஷ் குமார் (59 வயது).

இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக  அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை வீடியோ எடுத்தும் வந்துள்ளார்.  இதுதொடர்பாக நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்படாத பின், உள்விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் அவர் குற்றமற்றவர் என்று கூறிவிட்டது.

இதனையடுத்து கடந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் (NCW), உயர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் ரஜ்னீஷ் குமார் மீது பாதிக்கப்பட்டவர் பெயர் குறிப்பிடப்படாமல் பாலியல் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் புகாரில், பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் ஆபாசமான நிலையில் இருப்பதைக் காட்டும் பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.

 

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் 13 அன்று தான் அவர் மீது எப்ஐஆர் பதவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 64 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 68 (அதிகாரத்தில் உள்ள ஒருவரால் பாலியல் வல்லுறவு), மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 (சைபர் குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் ரஜ்னீஸ் குமார் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை அறிந்ததும், ரஜ்னீஷ் குமார் தலைமறைவாகியுள்ளார்.

 மாணவிகளுக்கு பரீட்சையில் நல்ல கிரேட் தருவது, வேலை  வாங்கி தருவது ஆகிய ஆசைகளை காட்டி பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் இந்த செயல்களில் 20 வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வந்ததாக ஹத்ராஸ் மாவட்ட எஸ்பி சிரஞ்சீவி நாத் சின்ஹா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் மகளிர் ஆணையத்தில் சமர்ப்பித்த படங்களில் 12, ரஜ்னீஷ் சின்ஹா, காலேஜின் டீன் ஆபீசில் வைத்தே மாணவிகளிடம் அத்துமீறுவதைக் காட்டுகிறது.

அதில் உள்ள மாணவிகளை அடையாளம் காண போலீசார் முயன்றனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையே தலைமறைவான பேராசிரியர் ரஜ்னீஷ் சின்ஹாவை தேடும் பணியில் ஹத்ராஸ் போலீஸ் ஈடுபட்டுள்ளது. 

 

Tags:    

Similar News