ரெயில்வே வேலை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை சம்மன்.. ராப்ரி தேவி ஆஜர்.. லாலு பிரசாத்திடம் நாளை விசாரணை
- குரூப் D பணியாளர்களை நியமிப்பதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு.
- அப்போது அங்கு நூற்றுக்கணக்கான ஆர்ஜேடி தொண்டர்கள் கூடி அவரை புகழ்ந்து கோஷம் எழுப்பினர்.
ரெயில்வே வேலைக்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்ற ஊழல் வழக்கில் விசாரணைக்கு அஜ்ரரகுமாறு ஆர்ஜேடி தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி, மகன் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
லாலு பிரசாத் நாளை (புதன்கிழமை) பாட்னாவில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் முன் ஆஜராகுமாறும், மனைவி உள்ளிட்டோர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராகுமாறும் அமலாக்கத்துறை சம்மன் தெரிவித்தது.
அதன்படி இன்று பட்லிபுத்ரா மக்களவை எம்பி, மூத்த மகள் மிசா பாரதியுடன், ராப்ரி தேவி வங்கி சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவகத்தில் ஆஜரானார். அப்போது அங்கு கூடிய நூற்றுக்கணக்கான ஆர்ஜேடி தொண்டர்கள் அவரை புகழ்ந்து கோஷம் எழுப்பினர்.
லாலு பிரசாத் யாதவ், 2004 -2009 காலகட்டத்தில் UPA அரசில் மத்திய ரெயில்வே அமைச்சராக இருந்தபோது, இந்திய ரெயில்வேயில் குரூப் D பணியாளர்களை நியமிப்பதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சிபிஐ அறிக்கையின்படி , ரெயில்வேயில் வேலைகளுக்கு ஈடாக நிலத்தை லஞ்சமாக எழுதித்தருமாறு கூறி தேர்வர்களிடம் லஞ்சம் பெறப்பட்டது.
கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்ட லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களான மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோர், குரூப் D அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களின் குடும்பத்தினரிடமிருந்து நிலப் பட்டாக்களைப் பெற்றனர் என்று குறிப்பிடடுள்ளது.
இதற்கிடையே அமலாக்கத்துறை விசாரணைக்கு நாளை லாலு பிரசாத் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.