இந்தியா
லோக் ஆயுக்தா ரெய்டில் கட்டுக்கட்டாக பணம், 40 கிலோ வெள்ளி பறிமுதல்
- லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
- சொத்து ஆவணங்களை லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் நேற்றுமுன்தினம் பறிமுதல் செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று போபாலில் லோக் ஆயுக்தா சோதனையின் போது, போக்குவரத்துத் துறையின் முன்னாள் கான்ஸ்டபிள் ஒருவரின் வீட்டில் கட்டுக்கட்டாக 200 ரூபாய் நோட்டுகள் மற்றும் 40 கிலோ வெள்ளி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, போபால் அரேரா காலனியில் வசிக்கும் சவுரப் சர்மா என்பவர் வீட்டில் ரூ.2.5 கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி, சொத்து ஆவணங்களை லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். இவர் ம.பி. சாலை போக்குவரத்துத் துறை போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றினார். கடந்த ஆண்டுதான் விஆர்எஸ் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.