கேரளாவில் 6 வயது சிறுமியை கழுத்தை நெரித்துக் கொன்ற சித்தி..
- பிரேத பரிசோதனையில் சிறுமி முஸ்கான் மூச்சுத்திணறலால் உயிரிழந்தாக இறந்ததை உறுதி தெரிய வந்தது.
- உள்ளூர் சூனியக்காரரான நௌஷாத், அனீஷாவை கொலை செய்ய தூண்டியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்
கேரளாவில் 6 வயது சிறுமியை சித்தி கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த எர்ணாகுளம் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடனத்துள்ளது.
கொத்தமங்கலம் அருகே உள்ள நெல்லிக்குழியில் வசித்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜாஸ் கான் என்பவரின் மகள் முஸ்கான் [6 வயது]. அஜாஸ் கானின் இரண்டாவது மனைவி அனீஷா.
சிறுமி முஸ்கான் டிசம்பர் 19 [வியாழன்] அன்று காலை தனது வீட்டில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் முஸ்கான் படுக்கையில் அசையாமல் படுத்திருப்பதாக அவரது தந்தை கருதிய நிலையில் இறுதியில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
பிரேத பரிசோதனையில் சிறுமி முஸ்கான் மூச்சுத்திணறலால் உயிரிழந்தாக இறந்ததை உறுதி தெரிய வந்தது. இதனையடுத்து நடந்த விசாரணையில் சித்தி அனீஷா சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது.
விசாரணையில், புதன்கிழமை இரவு கணவர் இல்லாதபோது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதை அனீஷா ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அனீஷாவின் மூட நம்பிக்கையால் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் கருதுகிறது.
உள்ளூர் சூனியக்காரரான நௌஷாத், அனீஷாவை கொலை செய்ய தூண்டியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே நௌஷாத்திடம் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.