இந்தியா
சுதந்திர தினம்- செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார் பிரதமர் மோடி
- இது பிரதமர் மோடியின் 11-வது சுதந்திர தின உரையாகும்.
- மூவர்ணக்கொடியேற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
புதுடெல்லி:
இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதில் இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழா பிரதான விழா ஆகும். இந்த விழாவையொட்டி பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11-வது சுதந்திர தின உரையாகும்.
இந்நிலையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார். மூவர்ணக்கொடியேற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.