இந்தியா

ஜெய்ப்பூர் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு... ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

Published On 2024-12-20 07:59 GMT   |   Update On 2024-12-20 07:59 GMT
  • 20 மீட்டர் உயரத்துக்கு மேல் தீ பிழம்புகள் வெளியானது.
  • லாரிகளும், பெட்ரோல் பங்க்கும் தீப்பிடித்ததால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் ஜெய்ப்பூர் அருகே பங்ரோதா என்ற பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அங்கு இன்று அதிகாலை 40-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன.

அப்போது ரசாயனம் ஏற்றி இருந்த டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் நிரப்புவதற்காக அந்த பெட்ரோல் பங்க்குக்கு வந்தது. அப்போது அந்த ரசாயன டேங்கர் லாரி அங்கு நிறுத்தப்பட்டிருந்த கியாஸ் லாரி மீது பயங்கரமாக மோதியது.

2 லாரிகளும் மோதிய வேகத்தில் ரசாயன லாரியில் தீப்பிடித்தது. அந்த தீ கியாஸ் லாரி மீது பரவியது. இதனால் கண் இமைக்கும் நேரத்துக்குள் கியாஸ் நிரப்பப்பட்டிருந்த லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

அந்த தீப்பொறிகள் பெட்ரோல் பங்க் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற டேங்கர் லாரிகள் மீது விழுந்தன. இதனால் அந்த லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதி முழுக்க தீப்பிடித்து எரிந்தது போன்று மாறியது.


லாரிகளில் பிடித்த தீ பெட்ரோல் பங்குக்கும் பரவியது. இதனால் அந்த பெட்ரோல் பங்க் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. 20 மீட்டர் உயரத்துக்கு மேல் தீ பிழம்புகள் வெளியானது. இது பல கிலோ மீட்டர் தொலைவுக்கு எரிந்தது.

லாரிகளும், பெட்ரோல் பங்க்கும் தீப்பிடித்ததால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. அந்த பகுதியில் இருந்தவர்களும், டேங்கர் லாரி டிரைவர்களும், பெட்ரோல் பங்க் ஊழியர்களும் அலறியடித்து உயிர் பிழைக்க ஓடினார்கள்.

இந்த கோர தீ விபத்து இன்று காலை 5.30 மணி யளவில் நிகழ்ந்தது. ஏற்க னவே பனிப்பொழிவு காரணமாக அந்த பகுதியில் அடர்புகை இருந்தது. தீப்பு கையும் சேர்ந்து கொண்ட தால் டேங்கர் லாரி டிரை வர்கள் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

40-க்கும் மேற்பட்டவர் கள் புகை மூட்டத்துக் குள்ளும், தீப்பிடித்த லாரி களுக்கும் சிக்கிக்கொண்ட னர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பல்வேறு பகுதி களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர்.

அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதன் பிறகு மீட்பு பணிகள் நடந்தன. அப்போது 8 பேர் கருகி பலியாகி இருப்பது தெரிய வந்தது.

தீக்காயங்களுடன் 37 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர் களை போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் மீட்டு ஜெய்ப்பூரில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். லாரி களில் பிடித்த தீ நீண்ட நேரம் எரிந்ததால் கடுமையான கரும்புகை கிளம்பியது.

அந்த கரும்புகை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பரவியதால் மக்கள் மத்தியில் பதட்டம் உருவானது. இதையடுத்து கூடுதல் மீட்பு படையினர் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த கோர தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் முழுமையாக எரிந்து சாம்பலாகி விட்டன. அதுபோல பெட்ரோல் பங்க்கிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

அந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல்-டீசல் நிரப்ப வந்திருந்த தனியார் வாகனங்களும் எரிந்து சேதம் அடைந்தன.

எத்தனை வாகனங்கள் முழுமையாக எரிந்து நாசமானது என்று போலீசார் கணக்கு எடுத்து வருகிறார்கள். லாரிகள் தீப்பி டித்து எரியும் காட்சிகளை உயிர் தப்பியவர்கள் செல்போனில் படம் எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி தீவிபத்து சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

மேலும் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News