பெண் மந்திரிக்கு எதிராக அவதூறு பேச்சு: கைது செய்யப்பட்ட பா.ஜ.க. தலைவர் சிடி ரவி நீதிமன்றத்தில் ஆஜர்
- பெண் மந்திரிக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார்.
- எம்.எல்.ஏ., எம்.பி.க்கான நீதிமன்றம் இந்த வழக்கு விசாரிக்க இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. தலைவர் சி.டி. ரவி. இவர் மேலவை உறுப்பினராகவும் உள்ளார். இவருக்கு எதிராக கர்நாடக மாநில பெண் மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது சி.டி. ரவி "அவர்கள் (அரசு) சர்வாதிகாரிகளைப் போல நடந்து கொண்டுள்ளன. எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி உள்ளது. சர்வாதிகாரம் நீண்ட காலம் நீடிக்காது. அரசியல் தூண்டுதல் காரணமாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இரவு முழுவதும் உணவு வழங்காமல் போலீசார் எராளமான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இதை நீதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்வேன்" என்றார்.
சி.டி. ரவி வழக்கை எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த இருக்கிறது.
நேற்று கர்நாடக மாநில சட்டசபை ஒத்திவைக்கப்பட்டபோது சி.டி. ரவி லட்சுமி ஹெப்பால்கருக்கு எதிராக அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் நேற்று சி.டி. ரவியை கைது செய்தனர்.