அம்பேத்கரை பா.ஜ.க. இழிவுபடுத்தியதற்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு மம்தா அழைப்பு
- நமது அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கரை இழிவுபடுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது.
- சாதி வெறியான பா.ஜ.க. அரசு தொடர்ந்து நம்முடைய ஜனநாயத்தை தாக்கி வருகிறது.
பா.ஜ.க. அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்கு எதிராக மேற்கு வங்க மாநிலத்தில் 23-ந்தேதி மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்கு எதிராக மம்தா பானர்ஜி பா.ஜ.க.-வுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நமது அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கரை இழிவுபடுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சாதி வெறியான பா.ஜ.க. அரசு தொடர்ந்து நம்முடைய ஜனநாயத்தை தாக்கி வருகிறது. அரசியலமைப்பின் முதுகெலும்பு மீது தாக்கதல் நடத்தியுள்ளது. தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக சதி செய்கிறது.
அம்பேத்கருக்கு எதிராக அவமதிப்பு கருத்து கூறியதற்கு எதிராகவும், நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களை இழிவுப்படுத்தியதற்கு எதிராகவும் டிசம்பர் 23-ந்தேதி மதியம் 2 மணி முதல் 3 மணி நாடு முழுவதும் போராட்ட பேரணி நடைபெறும். மாநிலத்தின் ஒவ்வொரு நகராட்சி, பிளாக் மற்றும் கொல்கத்தாவின் ஒவ்வொரு வார்டு என அனைத்து பகுதியிலும் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.