பிரியங்கா காந்திக்கு 1984 வன்முறையை குறிக்கும் வகையிலான கைப்பையை பரிசளித்த பாஜக எம்.பி.
- பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கைப்பை அணிந்திருந்தார் பிரியங்கா.
- 1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை சுட்டிக்காட்டும் வகையில் பா.ஜ.க. எம்.பி. வழங்கினார்.
காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யான பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் பாலஸ்தீனம் என எழுதப்பட்டிருந்த கைப்பை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்திருந்திருந்தார். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் கொடூரமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதை அணிந்து வந்திருந்தார்.
நேற்று வங்கதேசத்தில் மைனாரிட்டிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வங்கதேசத்தில் மைானரிட்டிகள் தாக்குப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் அடங்கிய கைப்பை அணிந்து வந்திருந்தார். அவருடன் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் பலரும் கைப்பை அணிந்து வந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று 1984-ம் ஆண்டு நடைபெற்ற சீக்சியர்களுக்கு எதிரான வன்முறையை குறிக்கும் வகையில் ரத்தம் சொட்டும் வகையில் 1984 என எழுதப்பட்டிருந்த கைப்பையை பிரியங்கா காந்திக்கு ஆத்திரமூட்டும் வகையில் பா.ஜ.க. எம்.பி. அபரஜிதா சாரங்கி வழங்கினார்.
அந்த பையை வாங்கிய பிரியங்கா காந்தி அதில் என்ன எழுத்தியிருக்கிறது என்று பார்க்காமல் சென்றார்.
கைப்பை வழங்கியது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. அபரஜிதா சாரங்கி கூறுகையில் "இந்திரா காந்தி படுகொலையை தொடர்ந்து 1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் காங்கிரஸ் வரலாற்று தவறை செய்துள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் அந்த பையில் கிராபிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. இந்த வன்முறை நாடு தழுவிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதில் அரசு தகவலின்படி டெல்லியில் 2800 பேரும், நாடு முழுவதும் 3350 பேர் உயிரழந்தனர்.
1984-ம் ஆண்டு நடந்த அட்டூழியங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது மிகவும் முக்கியமானது. காங்கிரசின் கடந்த கால நடவடிக்கையை மக்கள் அறிந்திருக்க வேண்டும்.
இவ்வாறு அபரஜிதா சாரங்கி தெரிவித்துள்ளார்.