இந்தியா
கடலில் 150 கிலோமீட்டர் நீந்தி சாதனை படைத்த பெண்
- என்.டி.ஆர் கடற்கரை வரை 150 கிலோமீட்டர் தூரத்தை கடலில் நீந்தி கடந்தார்.
- அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், சமல் கோட்டை சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 52). நீச்சல் வீராங்கனையான இவர் நேற்று முன்தினம் விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரையில் இருந்து காக்கிநாடா சூரிய பேட்டையில் உள்ள என்.டி.ஆர் கடற்கரை வரை 150 கிலோமீட்டர் தூரத்தை கடலில் நீந்தி கடந்தார்.
கடலில் 150 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி கடந்த ஷர்மிளாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
ஏற்கனவே ராமசேது இலங்கை லட்சத்தீவு உள்ளிட்ட கடலில் நீந்தி இருக்கிறேன். கடலில் நீந்தி செல்லும் போது ஜல்லி மீன்களால் ஏற்படும் சவால்கள் குறித்தும், ராம் பள்ளியில் இருந்து ஆமைகள் தன்னை பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறினார்.
அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலில் நீந்தியதாக அவர் தெரிவித்தார்.