இந்தியா
8 வயதில் ஆசிய சாதனை படைத்த சிறுமி
- குழந்தை பருவம் முதலே தனது தந்தையுடன் ஜிம்முக்கு சென்று வந்த அர்ஷியாவுக்கு பளுதூக்குதலில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.
- வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் சிறுமியின் திறமையை பாராட்டி பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சாதனைகள் படைக்க வயது முக்கியமல்ல என நிரூபித்துள்ளார் 8 வயது சிறுமி ஒருவர். அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்தவர் அர்ஷியா கோஸ்வாமி. குழந்தை பருவம் முதலே தனது தந்தையுடன் ஜிம்முக்கு சென்று வந்த அர்ஷியாவுக்கு பளுதூக்குதலில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.
இதனால் அதிக எடை கொண்ட பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்ற அவர் சமீபத்தில் 60 கிலோ எடை தூக்கும் போட்டியில் வென்று ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளதாக இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் சிறுமியின் திறமையை பாராட்டி பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.