இந்தியா
டெல்லி ரெயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல்: 15 பேர் பலி
- டெல்லி ரெயில் நிலையத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
- இந்த நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
புதுடெல்லி:
புதுடெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் 14 மற்றும் 15 நடைமேடைகளில் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். பெண்கள் பலர் மயக்கம் அடைந்தனர்.
கும்பமேளா செல்வதற்காக ஒரே நேரத்தில் அதிக அளவில் பயணிகள் குவிந்ததால் டெல்லி ரயில் நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து 4 தீயணைப்பு வண்டிகளில் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டன. நெரிசலில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி துணை நிலை ஆளுநர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.