இந்தியா

பள்ளிச் சீருடையுடன் மரத்தில் தொங்கிய 2 சிறுமிகளின் உடல்கள்.. அதிர்ச்சி சம்பவம்

Published On 2025-02-09 11:53 IST   |   Update On 2025-02-09 11:53:00 IST
  • கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை
  • உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

ஒடிசாவில் பள்ளி சீருடையில் இருந்த இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் காட்டில் உள்ள மரம் ஒன்றில் சிறுமிகளின் உடல்கள் தொங்கிய நிலையில் நேற்று கண்டெடுப்பட்டன.

உயிரிழந்த சிறுமிகள் இரண்டு நாட்களாகக் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த எம்.வி 74 கிராமத்தைச் சேர்ந்த ஜோதி ஹல்தார் (13) மற்றும் எம்.வி 126 கிராமத்தைச் சேர்ந் மந்திரா சோடி (13) என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் ஒரே உள்ளூர் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர்.

கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை என்று பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். 

இதற்கிடையே அருகில் காட்டில் உள்ள ஒரு மரத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் இரண்டு உடல்களையும் உள்ளூர்வாசிகள் கண்டு போலீசுக்கு தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.   

Tags:    

Similar News