இந்தியா

டெல்லியில் 4 ஆஸ்பத்திரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2024-05-14 14:00 IST   |   Update On 2024-05-14 14:00:00 IST
  • சில மருத்துவமனைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.
  • வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைநகர் மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள பல பள்ளிகள் வெடிகுண்டு மிரட்டல் குறித்து புகாரளித்த சில வாரங்களுக்குப் பிறகு, டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் மூலம் வந்தன. டெல்லியில் உள்ள சில மருத்துவமனைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஜி.டி.பி. மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்தேவார் மருத்துவமனை, தீப்சந்தூர் மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவத்தால் டெல்லி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைகள், விமான நிலையம், டெல்லி வடக்கு ரெயில்வேயின் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அலுவலகம் ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News