இந்தியா

சந்திரயான்- 4 திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Published On 2024-09-18 11:20 GMT   |   Update On 2024-09-18 11:20 GMT
  • சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறங்கும் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வரவுள்ளது.
  • வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் திட்டத்தின்படி சர்வதேச விண்வெளி மையத்தின் முதற்கட்ட அலகுகளை கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறங்கும் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வரவுள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் நிலவிலேயே இருக்கும் நிலையில், சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் விண்கலம் நிலவில் தரையிறங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளது.

இந்த விண்கலம் நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு திரும்பி வந்து பூமியில் அது குறித்து ஆராய்ச்சி நடைபெற உள்ளது.

2040க்குள் இந்த விண்கலத்தை பூமியில் தரை இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.20,193 கோடி செலவில் திட்டம் ககன்யான் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News