இந்தியா
கோவிலில் திருமணம் செய்ய தலித் தம்பதிக்கு அனுமதி மறுப்பு - பூசாரி மீது FIR பதிவு
- அங்கிதா மற்றும் அஜய் ஆகியோர் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
- கோவில் பூசாரி நாகேந்திர செல்வால் கோவில் கதவுகளை பூட்டியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலில், கோவில் வளாகத்தில் தலித் தம்பதியினரின் திருமணத்திற்கு அனுமதி மறுத்த பூசாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்..
மார்ச் 5 ஆம் தேதி அங்கிதா மற்றும் அஜய் ஆகியோர் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். அப்போது கோவில் பூசாரி நாகேந்திர செல்வால் கோவில் கதவுகளை பூட்டிவிட்டு அவர்களை சாதி ரீதியாக திட்டியுள்ளார். இதனால் அந்த தம்பதியால் அன்று திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.
கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி மணமகளின் தந்தை மார்ச் 12 அன்று புகார் அளித்ததைத் தொடர்ந்து, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.