இந்தியா
VIDEO: கணவனை கொன்ற 11 நாட்களுக்கு பிறகு காதலனுடன் சேர்ந்து ஹோலி கொண்டாடிய மனைவி

VIDEO: கணவனை கொன்ற 11 நாட்களுக்கு பிறகு காதலனுடன் சேர்ந்து ஹோலி கொண்டாடிய மனைவி

Published On 2025-03-22 08:57 IST   |   Update On 2025-03-22 08:57:00 IST
  • மனைவி முஸ்கான் சாஹில் என்பவருடன் தகாத உறவில் இருப்பதை கணவன் சவுரப் தட்டிக்கேட்டுள்ளார்.
  • முஸ்கான் மற்றும் அவரது காதலன் சாஹிலை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் காதலனுடன் சேர்ந்து மனைவி தனது கணவனை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் போட்டு சிமெண்டால் அடைத்த கோர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரப் பிரதேசம் மீரட் மாவட்டம் பிரம்மபுரியை சேர்ந்தவர் சவுரப் ராஜ்புத் (32 வயது). லண்டனை தளமாகக் கொண்ட வணிக கடற்படை அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முஸ்கான் ரஸ்தோகி என்ற பெண்ணை காதலித்து திருணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்போது 5 வயதில் ஒரு மகள் உள்ளாள். மனைவி, மகள் பிரம்மபுரியில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.

லண்டனில் பணியாற்றும் சவுரப் ராஜ்புத், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி மனைவி முஸ்கானின் பிறந்தநாள், பிப்ரவரி 28 ஆம் தேதி மகளின் பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு கடந்த மாதம் சவுரப் ஊருக்கு திரும்பி வந்தார்.

ஆனால் தனது மனைவி முஸ்கான் சாஹில் என்பவருடன் தகாத உறவில் இருப்பதை கணவன் சவுரப் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையில் வாக்குவாதம் எழுந்தது. இந்நிலையில் கணவன் சவுரப்பை கொலை செய்ய முஸ்கான் தனது காதலுடன் சேர்ந்து திட்டம் தீட்டி கடந்த மார்ச் 7 ஆம் தேதி சவுரபுக்கு மயக்க மருந்து கொடுத்தார். அதன்பின் அவரது இதய பகுதியில் கத்தியால் பலமுறை ககுத்தி இருவரும் கொலை செய்தனர்.

மேலும் திட்டமிட்டபடி சவுரபின் உடலை 15 துண்டுகளாக வெட்டி அதை டிரம் ஒன்றில் போட்டு அதன் மீது சிமெண்டை ஊற்றி உலரவைத்துள்ளனர். இதனை தொடர்ந்து முஸ்கான் மற்றும் அவரது காதலன் சாஹிலை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், தனது கணவரைக் கொன்று 11 நாட்களுக்கு பிறகு முஸ்கான் அவரது காதலன் சாஹில் சுக்லாவுடன் இணைந்து மணாலியில் ஹோலி கொண்டாடிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News