இந்தியா
பாந்திராவில் குடிசை வீட்டில் 286 கிலோ கஞ்சா பறிமுதல்- ஒருவர் கைது
- போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் குறிப்பிட்ட குடிசை வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
மும்பை:
மும்பை பாந்திரா கே.சி. சாலையில் உள்ள குடிசை பகுதியில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட குடிசை வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 286 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.71 லட்சத்து 68 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த இம்ரான் கமாலூதீன் அன்சாரி(வயது36) என்பவரை பிடித்து கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.