வனத்தில் இருந்து கடல் அழகை ரசிக்க மரப்பாலம்- மும்பை மாநகராட்சி தகவல்
- மாநகராட்சி அங்கு மரத்தால் ஆன நடைபாலத்தை அமைத்துள்ளது.
- மலபார்ஹில் கமலா நேரு பார்க் பகுதியில் தொடங்கி டூங்கர்வாடி வரை வன மரப்பாலம் உள்ளது.
மும்பை:
மும்பை மலபார்ஹில் பகுதியில் அரபிக்கடலையொட்டி மரங்கள் நிறைந்த வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் மாநகராட்சி அங்கு மரத்தால் ஆன நடைபாலத்தை அமைத்துள்ளது.
அடர்ந்த மரங்களுக்கு இடையே கடல் மற்றும் இயற்கை அழகை கண்டு ரசிக்கும் வகையில் இந்த மரப்பாலம் ரூ.25 கோடி செலவில் 470 மீட்டர் நீளத்தில் 2.4 மீட்டர் அகலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மலபார்ஹில் கமலா நேரு பார்க் பகுதியில் தொடங்கி டூங்கர்வாடி வரை வன மரப்பாலம் உள்ளது.
இந்த பாலம் அமைக்கும் பணி ஏறக்குறைய முடிந்துவிட்டது. விரைவில் இது பொதுமக்களுக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் மரப்பாலத்தில் நடந்தபடி இயற்றை அழகை ரசிக்க 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
மரப்பால திட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த திட்டம் மும்பை சுற்றுலாவுக்கு ஊக்கமாக இருக்கும். பராமரிப்பு, பாதுகாப்பு பணிகளுக்காக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது" என்றார்.