இந்தியா
டெல்லி: தூதரகத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 70 வயது ஊழியர் கைது
- பிப்ரவரி மாதம் குவைத் தூதரகத்தில் பணியாளராக பணிபுரிந்துள்ளார்.
- அப்போது தூதரக ஊழியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கணவர் குற்றச்சாட்டு.
டெல்லியில் உள்ள சாணக்கியாபூரில் குவைத் நாட்டுக்கான தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்தில் அபு பக்கர் (70) என்ற ஊழியர் பணிபுரிந்து வருகிறார். அங்கு பாராமரிப்பு பணியாளராக 20 வயது இளம் பெண் ஒருவர் வேலைப் பார்த்து வந்துள்ளார்.
இந்த பெண்ணுக்கு அபு பக்கர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர் அபு பக்கரை கைது செய்துள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களாக அபு பக்கர் குவைத் தூதரகத்தில் பணி புரிந்து வருவதாகவும், எனது மனைவி அங்கு வேலை பார்த்தபோது பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் பெண்ணின் கணவர் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் பிப்ரவரி மாதம் வேலை பார்த்துள்ளார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.