இந்தியா
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: SDPI கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.ஃபைசி கைது
- பெங்களூரில் வைத்து கைது செய்த அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
- பணமோசடி தடுப்புச் சட்டங்களை மீறியதாக விசாரணையில் கண்டறியப்பட்டதை அடுத்து ஃபைசி கைது செய்யப்பட்டார்.
தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே. ஃபைசியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள காந்தபுரத்தை சேர்ந்தவரான ஃபைசியை நேற்று இரவு பெங்களூரில் வைத்து கைது செய்த அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
சந்தேகத்திற்குரிய நிதி பரிவர்த்தனைகளை நடத்துவதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டங்களை மீறியதாக விசாரணையில் கண்டறியப்பட்டதை அடுத்து ஃபைசி கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் அமைப்புகளின் நிதி ஆதாரங்களை சீர்குலைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.