இந்தியா

அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு

Published On 2025-03-04 09:10 IST   |   Update On 2025-03-04 09:10:00 IST
  • காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் 6.30 மணி முதல் 11.50 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
  • இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் என கோவில் அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.

அயோத்தி:

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு உள்ள ராமர் கோவிலில் காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வந்தது.

ஆனால் பக்தர்களுக்கான தரிசன நேரத்தை நீட்டிக்கும் நோக்கில் காலை 6 மணிக்கே நடை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் 6.30 மணி முதல் 11.50 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் ராஜபோக ஆரத்திக்காக 12 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் பகல் 1 மணி முதல் மாலை 6.50 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும். 7 மணிக்கு சந்தியா ஆரத்தி வழிபாடு நடைபெறும். பின்னர் இரவு 9.45 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதைத்தொடர்ந்து 10 மணிக்கு நடை அடைக்கப்படும் என கோவில் அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News