இந்தியா
ரூ.611 கோடி பரிமாற்றத்தில் விதிமீறல் புகார்- பேடிஎம்முக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
- ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
- சட்டத்துக்கு உட்பட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயன்று வருவதாக பேடிஎம் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஓ.சி.எல்., அதன் நிர்வாக இயக்குனர், அதன் துணை நிறுவனங்களான லிட்டில் இன்டர்நெட், நியர்பை இண்டியா ஆகியோருக்கு அமலாக்கத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேற்கண்ட நிறுவனங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்தது, வெளிநாட்டில் இருந்து அன்னிய நேரடி முதலீடு பெற்றது போன்றவற்றில் அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட (பெமா) விதிமுறைகளை மீறியதாகவும், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறியதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
3 நிறுவனங்களும் மொத்தம் ரூ.611 கோடி அளவுக்கு பண பரிமாற்றம் செய்ததில் இந்த விதிமீறல்களில் ஈடுபட்டதால், நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
சட்டத்துக்கு உட்பட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயன்று வருவதாக பேடிஎம் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.