இந்தியா

இந்தியாவில் மட்டும் 45 கோடி பேர்.. சத்தமின்றி அதிகரிக்கும் ஆபத்து.. எச்சரிக்கை விடுக்கும் ஆய்வு முடிவு

Published On 2025-03-04 11:22 IST   |   Update On 2025-03-04 11:22:00 IST
  • சமீபத்தில் வெளியாகி உள்ள ஆய்வறிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
  • சீனாவில் 627 மில்லியன் (அதாவது 62 கோடி பேர்) அதிக எடை அல்லது பருமனான மக்கள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்களிடையே காணப்படும் கவலை உடல் எடை குறித்துதான். நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையில் உணவு முறை, தூக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்க நிறைய 'டயட்' முறைகள் இருந்தாலும் எடை குறைந்த பாடில்லை என்பது பெரும்பாலானவர்களின் கவலையாக உள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் வெளியாகி உள்ள ஆய்வறிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 45 கோடி பேர் உடல் பருமன் அல்லது அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது தான் இதற்கு முக்கிய காரணம்.



ஆய்வின்படி, உலகளவில் அதிக எடை கொண்டவர்களை அதிகம் கொண்ட நாடுகளாக இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவை தொடரும். 2050 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் 25 வயதுக்கு மேற்பட்ட பருமனான அல்லது அதிக எடை கொண்டவர்கள் மக்கள்தொகை 450 மில்லியன் (அதாவது 45 கோடி) ஆக இருக்கலாம்.

சீனாவில் 627 மில்லியன் (அதாவது 62 கோடி) அதிக எடை அல்லது பருமனான மக்கள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்த எண்ணிக்கை 214 மில்லியனை (21 கோடி) எட்டும் என்று சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News