கடவுளே சொர்க்கத்திலிருந்து இறங்கி வந்து பெங்களூரு தெருக்களில் நடந்தாலும்.. கைவிரித்த டி.கே.சிவகுமார்
- ரியான திட்டமிடல் செய்யப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டால் மட்டுமே இதை மாற்ற முடியும்
- "காங்கிரஸ் அரசு கர்நாடகாவிற்கும் பெங்களூருவிற்கும் ஒரு சாபக்கேடு"
தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் தங்கி வேலை செய்து வருகின்றர். வேகாமான நகரமயமாக்கல் அதீத போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பெங்களூரு திணறி வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பெங்களூரு குறித்து தெரிவித்துள்ள கருத்து விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று பெங்களூரு மாநகராட்சி ஏற்பாடு செய்த செய்த சாலை கட்டுமானம் குறித்த பட்டறையில் பேசிய சிவகுமார், கடவுள் சொர்க்கத்திலிருந்து இறங்கி பெங்களூரு தெருக்களில் நடந்தாலும், ஒன்று, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் எதுவும் மாறாது என்பதை இங்குள்ள ஊடகவியலாளர்களிடம் நான் கூற விரும்புகிறேன்.
நகரத்தின் நிலைமை மிகவும் சவாலானது. சரியான திட்டமிடல் செய்யப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டால் மட்டுமே இதை மாற்ற முடியும். எதிர்காலத்திற்காக சிறந்த சாலைகளை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்று தெரிவித்தார்.
சிவகுமாரின் கருத்து குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "முதலில் காங்கிரஸ் அரசாங்கம் வளர்ச்சிப் பணிகளுக்கு பணம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டது.
இப்போது பகுதி நேர பெங்களூரு மேம்பாட்டு அமைச்சர் டி.கே. சிவகுமார் அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு நகரத்தில் எந்த மாற்றமும் சாத்தியமில்லை என்று கூறுகிறார். காங்கிரஸ் அரசு கர்நாடகாவிற்கும் பெங்களூருவிற்கும் ஒரு சாபக்கேடு. இந்த தோல்வியுற்ற அரசாங்கத்தை அகற்ற மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்" என்று விமர்சித்துள்ளார்.