இந்தியா
மும்பை அருகே 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 250 பேர் வெளியேற்றம்
- தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
- யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தானே:
மும்பை அருகே உள்ள தானே மாவட்டத்தில் ஸ்ரீநகரில் வாக்லே எஸ்டேட் பகுதி அமைந்து உள்ளது. இங்குள்ள 5 மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் இருந்த சலவைக் கடையில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதைதொடர்ந்து குடியிருப்பில் இருந்த சுமார் 250 பேரும் பாதுகாப்பாக கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் 1 மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.
பின்னர் வெளியேற்றப் பட்டவர்கள் தங்கள் குடியிருப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.