டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பங்கேற்பு?
- முன்னாள் ராணுவ தளபதி ஆவார்.
- கடந்த அக்டோபர் மாதம் அதிபராக பொறுப்பேற்றார்.
புதுடெல்லி:
76-வது குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி டெல்லி யில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். ஒவ்வொரு குடியரசு தின அணிவகுப் பிலும் வெளிநாட்டை சேர்ந்த அதிபர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார்.
26-ந்தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா கபியாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
கடந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரான் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். டெல்லி வரும் இந்தோனேசிய அதிபர் சுபி யாண்டோ பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
73 வயதான அவர் முன்னாள் ராணுவ தளபதி ஆவார். கடந்த அக்டோபர் மாதம் அவர் அதிபராக பொறுப்பேற்றார். குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வரும் இந்தோனேசியா அதிபர் இங்கிருந்து பாகிஸ்தான் செல்ல மாட்டார் என்று தெரிகிறது. அவர் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வார் என்று பாகிஸ்தான் நாட்டு ஊடகங்கள் தெரிவித்து இருந்தன.