null
தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்கும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அதானி - அஜித் பவார் பளார்!
- அஜித் பவார் பா.ஜ.க.வில் இணைந்து, துணை முதல்வர் பதவியேற்றார்.
- நவம்பர் மாதம் பா.ஜ.க.வுடன் நடைபெற்ற சந்திப்புகள் குறித்து பேசினார்.
அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க. மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி.) இடையே நடந்த அரசியல் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இருந்தார் என்று மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். அந்த பேச்சுவார்த்தையின் முடிவில், அஜித் பவார் பா.ஜ.க.வில் இணைந்து, துணை முதல்வர் பதவியேற்றார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், செய்தியாளரிடம் பேசிய அஜித் பவார் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பா.ஜ.க.வுடன் நடைபெற்ற சந்திப்புகள் குறித்து பேசினார்.
அப்போது, "ஐந்தாண்டுகள் ஆகிவிட்டது. கூட்டம் எங்கு நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும், இது டெல்லியில் ஒரு தொழிலதிபர் வீட்டில் நடந்தது. எல்லாருக்கும் தெரியும். இதெல்லாம் ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்தது. ஆம், ஐந்து சந்திப்புகள் நடந்தன. எல்லோரும் அங்கே இருந்தார்கள்."
"மீண்டும் சொல்கிறேன். அமித் ஷா, கௌதம் அதானி, பிரபுல் படேல், தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் சரத் பவார். எல்லோரும் அங்கே இருந்தார்கள். அங்குதான் எல்லாம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் பழி என் மீது விழுந்துள்ளது. நான் பழியை ஏற்றுக்கொண்டேன், மற்றவர்கள் பாதுகாப்பாக இருக்கட்டும்."
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி பிரிந்தபோது பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க என்.சி.பி.யை பிளவுபடுத்த முயன்றபோது தான் அஜித் தற்போது குறிப்பிடும் சந்திப்புகள் நடந்தன. அஜித் பவார் பல எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மகா விகாஸ் அகாடியை உருவாக்கினார்.
அந்த நேரத்தில், சரத் பவார் பா.ஜ.க.வில் சேர மறுத்ததால், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் என்.சி.பி. கட்சிக்குத் திரும்பிய பின்னர், அஜித் பவார் சுமாராக 80 மணி நேரம் துணை முதல்வராக இருந்தார். கடைசியில் ஜூலை 2023 இல் தான் அஜித் பவாரால் கட்சியைப் பிளவுபடுத்த முடிந்தது. அதன்பிறகு மஹாயுதியின் ஒரு பகுதியாக பா.ஜ.க. மற்றும் சிவசேனா கூட்டணியில் சேர்ந்தார்.