டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.87.31 ஆக சரிவு
- 2024 அக்டோபரிலிருந்து ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட 4% வீழ்ச்சியடைந்துள்ளது.
- அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகள் அமெரிக்க டாலரின் மதிப்பை உயர்த்தியுள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்றைய வர்த்தகம் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67 பைசா குறைந்து இதுவரை இல்லாத அளவிற்கு 87.31 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பின் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 87 ரூபாய்க்கு மேல் சரிந்துள்ளது. 2024 அக்டோபரிலிருந்து ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட 4% வீழ்ச்சியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகள் அமெரிக்க டாலரின் மதிப்பை உயர்த்தியுள்ளது. அமெரிக்க டாலரின் வலிமை சீன யுவான் உட்பட பிற ஆசிய நாணயங்களையும் பாதித்துள்ளது. சீன யுவானின் சரிவு இந்திய நாணயத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூபாய் மட்டுமல்ல, டிரம்ப் வரிவிதிப்பின் விளைவாக இந்திய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.