இந்தியா

ஆளுநரை திரும்பக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

Published On 2025-02-03 13:48 IST   |   Update On 2025-02-03 13:48:00 IST
  • வழக்கறிஞர் ஜெய்சுகின் கடந்த மாதம் பொதுநல மனு வழக்கு தொடர்ந்தார்.
  • ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், தமிழக அரசுக்கும் மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவியில் இருந்து திரும்ப பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் கடந்த மாதம் 10-ம் தேதி பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "அரசியல் சாசனத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அதற்கான உரிய உத்தரவை குடியரசு தலைவர், பிரதமர் அலுவலகம் மற்றும் ஒன்றிய அரசு ஆகியவைக்கு பரிந்துரையுடன் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது. ஆளுநர் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்," என்றனர்.

Tags:    

Similar News