பெண்ணை பார்த்தால் சீறும் பாம்பு உடை- வீடியோ வைரல்
- புதுமையான உடை வடிவமைப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
- வீடியோ காட்சி 30 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது.
செயற்கை அறிவு நுட்பத்துடன் வந்துள்ள பாம்பு உடை ஒன்று, பெண்ணை பார்ப்பவர்களை நோக்கி சீறுகிறது. இதுபற்றிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது.
கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் என்ஜினீயராக பணியாற்றும் கிறிஸ்டினா எர்ன்ஸ்ட், தனது தொழில்நுட்ப அறிவைக் கொண்டு ஒரு புதுமையான உடையை வடிவமைக்க விரும்பினார். கம்பிகள் மற்றும் பிளாஸ்டிக், மரத்துண்டுகள் ஆகியவற்றை கொண்டு பாம்பு வடிவ தோற்றத்தையும், மோட்டார்களை இணைத்து அது இயங்கும் வகையிலும் வடிவமைத்தார்.
அதை பெண்கள் அணியும் மேலாடையுடன் இணைத்து செயற்கை அறிவு உடையை வடிவமைத்து முடித்தார். உடையுடன் இணைக்கப்பட்டுள்ள பாம்பு, அருகில் யாருடைய முகத்தையாவது சென்ஸார் உதவியுடன் இனம் கண்டால் உடனே தலையையும், உடலையும் அசைக்கத் தொடங்கிவிடும்.
பாம்பின் தலையில் பற்கள் கூறியதாக இருப்பது அது சீறும் தோற்றத்தை தருகிறது. புதுமையான இந்த உடை வடிவமைப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். சிலர் மட்டும் எதிர் கருத்துகளை பதிவிட்டனர். அவரது வீடியோ காட்சி 30 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது.