இந்தியா

70 அடி நீளத்தில் 2,254 கிலோ கேக் தயாரித்து கின்னஸ் சாதனை

Published On 2024-12-07 09:48 IST   |   Update On 2024-12-07 09:48:00 IST
  • பிரமாண்டமான கேக் நேற்று கோண்டாப்பூரில் உள்ள மாயா கன்வென்ஷன் சென்டரில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
  • கேக் தயாரிக்க ரூ.25 லட்சம் செலவு செய்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம், 2,254 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய ரஷியன் மெடோவிக் ஹனி கேக் தயாரித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

200 சமையல் கலைஞர்கள் 3 மாதங்கள் உழைத்து தயாரித்தனர். தேன், வெண்ணெய் கேரமல் மற்றும் கிரீம் சீஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்டமான கேக் நேற்று கோண்டாப்பூரில் உள்ள மாயா கன்வென்ஷன் சென்டரில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் பிரதிநிதிகளான ரிஷிநாத் மற்றும் நிகில் சுக்லா ஆகியோர் இந்த அரிய சாதனைக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளித்து கின்னஸ் சாதனை சான்றிதழை வழங்கினர். கேக் தயாரிக்க ரூ.25 லட்சம் செலவு செய்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 1 அடி அகலம், 70 அடி நீளம், 2,254 கிலோ எடை கொண்ட கேக் நுகர்வோர்கள் மட்டுமின்றி ஆதரவற்ற குழந்தைகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News