இந்தியா

VIDEO: தன் மீது மோதிய காரை கண்டுபிடித்து பழிவாங்கிய நாய்

Published On 2025-01-27 10:49 IST   |   Update On 2025-01-27 10:49:00 IST
  • மறுநாள் காரை பார்த்த போது, அதன் பானட்டில் ஏராளமான கீறல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • சேதம் அடைந்த காரை சரி செய்ய ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் ஆனதாக கோஷி குறிப்பிட்டிருந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் திருப்பதிபுரம் காலனியை சேர்ந்தவர் பிரஹ்லாத் சிங் கோஷி. இவர் சமீபத்தில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க காரில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு நாய் மீது கார் மோதியது. இதில் நாய்க்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் தன் மீது மோதிய காரை பார்த்தும், காரை ஓட்டி சென்ற பிரஹ்லாத்தை பார்த்தும் நாய் குரைத்தது. பின்னர் சிறிது தூரம் காரை துரத்தியது.

இந்நிலையில் பிரஹ்லாத் திருமண விழாவுக்கு சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பினார். மறுநாள் காரை பார்த்த போது, அதன் பானட்டில் ஏராளமான கீறல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது முதல் நாள் கார் மோதியதில் காயமடைந்த நாய் மேலும் ஒரு நாயுடன் அவரது வீட்டிற்கு வந்து கார் பானட்டை தனது நகங்களால் கீறும் காட்சிகள் இருந்தது.

சேதம் அடைந்த காரை சரி செய்ய ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் ஆனதாக கோஷி குறிப்பிட்டிருந்தார்.



Tags:    

Similar News