இந்தியா (National)

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து கவலை கொள்ளும் தலைவர்களை சந்திக்க தயார்: அமித் ஷா

Published On 2024-07-01 09:23 GMT   |   Update On 2024-07-01 09:23 GMT
  • தண்டனைக்குப் பதிலாக நீதி வழங்கப்படும். விரைவான விசாரணை மற்றும் தாமதம் இல்லாமல் நீதி வழங்கப்படும்.
  • முன்னதாக போலீஸ் உரிமை மட்டுமே பாதுகாக்கப்பட்டது. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமை மற்றும் புகார் கொடுத்தவர்களின் உரிமை பாதுகாக்கப்படும்.

இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் இந்திய உள்துறை மந்திரி அமித் ஷா மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து கூறியதாவது:-

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று குற்றவியல் நீதிச் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.

புதிய குற்றவியல் நீதிச் சட்டங்கள் தொடர்பாக சந்தேகம் (கவலை எழுப்பும் எதிர்க்கட்சி தலைவர்கள்) எழுப்பும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியலை தாண்டி அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட 12 ஆயிரம் அதிகாரிகள் 22.5 லட்சத்திற்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களுக்கு பயிற்சி அளிக்க தயார் செய்யப்பட்டுள்ளனர்.

தண்டனைக்குப் பதிலாக நீதி வழங்கப்படும். விரைவான விசாரணை மற்றும் தாமதம் இல்லாமல் நீதி வழங்கப்படும்.

மூன்று குற்றவியல் நீதிச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் நவீன குற்றவியல் நீதி அமைப்புக்கு வழிவகுக்கும்.

77 வருட சுதந்திர காலத்திற்குப் பிறகு சுதேசி முழுமை பெற்றுள்ளது. இந்தியாவின் நெறிமுறைகளை உள்ளடக்கியதாக உள்ளது.

முன்னதாக போலீஸ் உரிமை மட்டுமே பாதுகாக்கப்பட்டது. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமை மற்றும் புகார் கொடுத்தவர்களின் உரிமை பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News