இந்தியா

தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன் - தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

Published On 2025-03-13 12:13 IST   |   Update On 2025-03-13 12:13:00 IST
  • தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி உள்ளிட்டோர் அழைப்பு விடுத்தனர்.
  • DELIMITATION கிடையாது, தென்மாநிலங்களுக்கான LIMITATION என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அமைச்சர் கே.என்.நேரு, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் அழைப்பு விடுத்தனர்.

இதன்பின்பு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரேவந்த் ரெட்டி, "தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன், இது தொடர்பாக எனது கட்சி தலைமையிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன்" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடைபெறும் சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்தார். மத்திய அரசின் நடவடிக்கை, DELIMITATION கிடையாது, தென்மாநிலங்களுக்கான LIMITATION. இதை நாங்கள் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாங்கள் வடஇந்தியாவை விட அதிக வரி கொடுக்கிறோம். நாங்கள் அதிக தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளோம்.

பாஜக வளர தென்னிந்தியா அனுமதிக்காததால் தென்னிந்தியாவை பாஜக அரசு பழிவாங்குகிறது. கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா ஏன் கர்நாடகா கூட பாஜகவை தோற்கடித்துள்ளனர். அவர்களுக்கு ஆந்திராவில் கூட இல்லை. இதற்கு பெயர் தான் பழிவாங்கும் அரசியல். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை பாராட்டுகிறேன்" என்று தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News