இந்தியா
VIDEO: வண்ணங்களாய் மாறிய வெள்ளை நிறம்.. உ.பி.யில் ஹோலி கொண்டாடிய கைம்பெண்கள்
- இந்த ஆண்டு ஹோலி பண்டிகை, ரம்ஜான் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று வருகிறது.
- வட இந்தியாவில் இன்றே ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.
வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஹோலி பண்டிகை, ரம்ஜான் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று வருகிறது.
நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், வட இந்தியாவில் இன்றே ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் விருந்தவனத்தில் வாழும் கைம்பெண்கள் வண்ண பொடிகளை தூவி ஹோலி கொண்டாடியுள்ளனர். கைம்பெண்கள் ஹோலி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.