இந்தியா
அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு 15-ந்தேதி வரை நீட்டிப்பு
- அபராதத்துடன், தாமதமாக கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் டிசம்பர் 31-ந் தேதி ஆக இருந்தது.
- மொத்த ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு குறைவாக இருப்பவர்கள், ரூ.1,000 அபராதம் செலுத்தினால் போதும்.
புதுடெல்லி:
2024-2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31-ந்தேதி கடைசிநாள் ஆகும்.
அந்த வாய்ப்பை தவற விட்டவர்கள், அபராதத்துடன், தாமதமாக கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் டிசம்பர் 31-ந் தேதி ஆக இருந்தது.
அவர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்யலாம். இருப்பினும், மொத்த ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு குறைவாக இருப்பவர்கள், ரூ.1,000 அபராதம் செலுத்தினால் போதும்.
இதற்கிடையே, அபராதத்துடன் தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் நேற்று முடிவடைய இருந்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
ஜனவரி 15-ந்தேதி வரை அபராதத்துடன் தாமதமான அல்லது திருத்தப்பட்ட வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.