இந்தியா

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு?

Published On 2025-01-03 11:32 GMT   |   Update On 2025-01-03 11:32 GMT
  • ஆம் ஆத்மி 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
  • காங்கிரஸ் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. விரைவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், அதிஷி முதல்வராக இருந்து வருகிறார்.

ஆம் ஆத்மியின் ஆட்சிக் காலம் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது. அதற்கு முன் தேர்தல் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் வாக்குப்பதிவுக்கு சுமார் ஒருமாத இடைவெளி அவசியம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும். அதன்பின வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு திரும்பப் பெறுதல் ஆகிய நடைமுறைகளுக்குப் பின் வாக்குப்பதிவு நடைபெறும்.

பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும என்பதால் டிசம்பர் கடைசி வாரம் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனக் கருதி ஆம் ஆத்மி கட்சி முன்கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. 70 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்ததுடன், கெஜ்ரிவால் மக்களை ஈர்க்கும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து அதற்கான விண்ணப்பத் பூர்த்தி செய்யும் பணியையும் தொடங்கி வைத்துவிட்டார்.

காங்கிரஸ் கட்சி 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. விரைவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்தர வாரம் இந்திய தேர்தல் ஆணையம் டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 3-ம் வாரத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதற்கிடையே அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, டெல்லி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்றால் டெல்லி பெண்களுக்கு மாதந்தோறும் 2100 ரூபாய், முதியோருக்கு இலவச சிகிச்சை, கோவில் பூசாரிகளுக்கு உதவித்தொகை என கெஜ்ரிவால் வாக்குறுதிகள் அளித்துள்ளார்.

Tags:    

Similar News