இந்தியா

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது.. பயணிகள் அவதி

Published On 2024-12-26 07:21 GMT   |   Update On 2024-12-26 07:21 GMT
  • ஐஆர்சிடிசி இணையதளம் தட்கல் பயணசீட்டு நேரத்தில் முடங்கியதால் பயணிகள் அவதி
  • இதனையடுத்து எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள் பலர் தங்களது விரக்தியை வெளிப்படுத்தினர்.

இந்திய ரெயில்வேவின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு போர்ட்டலான ஐஆர்சிடிசி, இந்தியா முழுவதும் தட்கல் பயணசீட்டு நேரத்தில் முடங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

டெல்லி, அகமதாபாத், சூரத், மும்பை, மதுரை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதாக கூறப்படுகிறது .

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதை அடுத்து எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள் பலர் தங்களது விரக்தியை வெளிப்படுத்தினர்.

Tags:    

Similar News