ஜம்மு காஷ்மீர்: சக போலீஸை ஏ.கே. 47 துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தற்கொலை செய்த ஹெட் கான்ஸ்டபிள்
- வேனுக்குள் இரண்டு காவலர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கிடந்தன.
- செலக்ஷன் கான்ஸ்டபிள் ஒருவர் காயமின்றி தப்பினார்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸ்காரர் ஒருவர் தனது சக ஊழியரை ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வடக்கு காஷ்மீரின் சோபோரில் இருந்து ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் உள்ள துணைப் பயிற்சி மைய (எஸ்டிசி) தல்வாராவுக்கு இரண்டு காவலர்கள், மற்றொரு சக ஊழியருடன் பயணம் செய்தபோது இந்த சம்பவம் நடந்தது.
காலை 6:30 மணியளவில் உதம்பூரின் ரெஹெம்பல் பகுதியில் உள்ள காளி மாதா கோவிலுக்கு அருகே போலீஸ் வேனுக்குள் இரண்டு காவலர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கிடந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அதிகாரிகள், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வாக்குவாதத்தில் டிரைவரை தலைமை கான்ஸ்டபிள் தனது ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்டார் என்று தெரிவித்தனர்.
வாகனத்தில் பயணித்த மற்றொரு நபரான தேர்வு செலக்ஷன் கிரேடு கான்ஸ்டபிள் ஒருவர் காயமின்றி தப்பியதாகவும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.