இந்தியா

கெஜ்ரிவால் பங்களாவில் 12 தங்க கழிப்பறை இருக்கு.. டெல்லி மக்களிடம் பாஜக நூதன பிரசாரம்

Published On 2024-12-31 10:06 GMT   |   Update On 2024-12-31 10:07 GMT
  • ஷீஷ்மஹாலில் உள்ள இந்த கழிப்பறைகள் ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ. 1.44 கோடி.
  • டெல்லி மக்களுக்கு நல்ல தரமான கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் கட்டுவோம்

டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஆட்சிக்கு ஆம் ஆத்மி - பாஜக இடையே குடுமிப் பிடி சண்டை நிலவி வருகிறது.

அதன் ஒரு பதியாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்த சமயத்தில் தனது ஷீஷ்மஹால் பங்களாவுக்குள் எப்படி ஆடம்பரமாக இருந்துள்ளார் பாருங்கள் என ஒரு வீடியோவை பாஜக ஐடி விங் சமீபத்தில் வைரல் செய்தது.

உடற்பயிற்சி கூடம், sauna குளியலறை போன்ற வசதிகளுக்காக ரூ. 3.75 கோடி வரை செலவாகியிருக்கும் என பாஜக ஊகித்துள்ளது. மேலும் பங்களாவில் மார்பிள் கிரானைட் பொருத்த ரூ. 1.9 கோடி, ஜிம் மற்றும் ஸ்பா பொருத்துவதற்கு மட்டும் ரூ. 35 லட்சம், இதர செலவினங்களாக ஒரு ரூ. 1.5 கோடி சேர்த்து பொதுப் பணத்தை அபகரித்து கெஜ்ரிவால் தனக்கென 7-ஸ்டார் ரிசார்ட்டைக் கட்டியுள்ளார் என்று பாஜக விமர்சித்தது. இதை கெஜ்ரிவால் முற்றிலுமாக மறுத்தார்.

 

இந்நிலையில் கெஜ்ரிவாலின் இந்த குடியிருப்பில் தங்கத்தில் முலாம் பூசப்பட்ட 12 கழிப்பறைகள் உள்ளதாக டெல்லி பாஜக பிரசாரம் செய்து வருகிறது. மக்கள் கூடும் இடத்தில் தங்க நிறத்தில் வெஸ்டர்ன் டாய்லட் கழிவறை மாதிரியை நிறுவி, போஸ்டர்கள் ஒட்டி பாஜக பம்பரமாக சுழன்று புதுவித பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

டெல்லி பாஜக தலைவர் ஆர்.பி.சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது தங்க முலாம் பூசப்பட்ட கழிப்பறை. கெஜ்ரிவால் தனது வீட்டில் இதுபோன்ற 12 கழிப்பறைகளை அமைத்திருந்தார்.

ஷீஷ்மஹாலில் உள்ள இந்த கழிப்பறைகள் ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ. 1.44 கோடி. மொத்தம் ரூ.56 கோடி மதிப்புள்ள மதிப்பும் கழிப்பறைகள் நிறுவப்பட்டன. இங்குள்ள கழிப்பறைகளின் நிலையை நாங்கள் பார்த்திருக்கிறோம். டெல்லியின் நிலைமை இதுதான், ஆட்சியில் இருப்பவர்கள் ஆடம்பரத்திற்காக பொது நிதியை வீணடிக்கிறார்கள், மக்கள் அவதிப்படுகிறார்கள்.

 

ஆம் ஆத்மி அரசாங்கம் இலவச சலுகைகள், வாக்குறுதிகள் மூலம் டெல்லி மக்களை தவறாக வழிநடத்துகிறது. எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், டெல்லி மக்களுக்கு நல்ல தரமான கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் கட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News