இந்தியா
வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு: 2 பெண்கள் உயிரிழப்பு
- வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
- பேரிடர் மேலாண்மைக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ரா அருகே உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி ஆலய வாரியத்தின் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
நிலச்சரிவில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.