இந்தியா (National)

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடல் அரசு மரியாதையுடன் தகனம்

Published On 2024-10-10 14:23 GMT   |   Update On 2024-10-10 14:23 GMT
  • டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
  • ரத்தன் டாடா உடல் இன்று காலை முதல் பொது மக்கள் அஞ்சலிக்காகவைக்கப்பட்டது.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக மும்பை பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயது முதிர்வு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் அவரது உடல்நிலை மோசமானதாக நேற்று மாலை தகவல் வெளியானது. இந்தநிலையில் நள்ளிரவு அவர் உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது. பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.

2012-ல் அவர் ஓய்வு பெற்றார். இதன் பின்னர் அவர் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்தார். இவர் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். நேற்றிரவு உயிரிழந்த ரத்தன் டாடா உடல் இன்று காலை முதல் பொது மக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு ரத்தன் டாடா உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News