இந்தியா

காரில் செய்த சாகசத்தால் விபத்தில் சிக்கிய மாணவர்கள்

Published On 2025-01-23 09:20 IST   |   Update On 2025-01-23 09:20:00 IST
  • வலப்புறமாக திரும்பிய போது கார் மீது அமர்ந்திருந்த 3 மாணவர்கள் கீழே விழுந்து காயம் அடைவது போன்று காட்சிகள் உள்ளது.
  • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதள புகழுக்காக இளைஞர்கள் செய்யும் சாகசங்கள் சில நேரங்களில் அவர்களுக்கு ஆபத்தாகி விடுகிறது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மாணவர்கள் சிலர் குழுவாக சேர்ந்து விருந்து கொண்டாடும் காட்சிகள் உள்ளது.

அப்போது பரபரப்பான சாலையில் அந்த மாணவர்கள் காரில் செல்கின்றனர். கருப்பு நிற உடையணிந்து ஸ்டைலாக காட்சி அளிக்கும் அந்த மாணவர்கள் கார் மீது அமர்ந்து பயணித்தனர். கார் வேகமாக சென்று வலப்புறமாக திரும்பிய போது கார் மீது அமர்ந்திருந்த 3 மாணவர்கள் கீழே விழுந்து காயம் அடைவது போன்று காட்சிகள் உள்ளது.

பின்னணியில் சிலர் சிரிக்கும் சத்தம் கேட்கிறது. ரீல்ஸ் வீடியோவுக்கு ஆசைப்பட்டு மாணவர்கள் விபத்தில் சிக்கியது போன்று தெரிகிறது. ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.



Tags:    

Similar News