இந்தியா
ரெயில் கூட்ட நெரிசலில் பாடி மகிழ்ச்சியான பயணிகள்- வீடியோ வைரல்
- இரவு நேர ரெயிலில் நெருக்கியடித்து ஏறி வீடு திரும்பினர்.
- வீடியோவாக வெளியிட அதை சமூக வலைத்தள ரசிகர்களும் வைரலாக்கினர்.
மும்பையில் ரெயில் கூட்ட நெரிசலை பயணிகள் கச்சேரி பாடி மகிழ்ச்சியாக மாற்றினர். இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஷ் ராக் என்ற இசைக்குழு மும்பையில் 3 நாட்கள் இசைக் கச்சேரி நடத்தியது. அதில் கலந்து கொண்டவர்கள், இரவு நேர ரெயிலில் நெருக்கியடித்து ஏறி வீடு திரும்பினர்.
இருக்கை கிடைக்காமல், நெரிசலில் நின்று வந்த பயணிகளில் ஒருவர் இசைக் கச்சேரியில் கேட்ட பாடல்களை செல்போனில் ஒலிக்கச்செய்து பாட ஆரம்பிக்க, அசதி தெரியாமல் பயணிக்க மற்ற பயணிகளும் கூட்டு சேர்ந்து 'கோரஸ்' பாட, பயணமே புதிய கச்சேரியாக களைகட்டியது.
இதை பயணி ஒருவர் தனது வலைத்தள பக்கத்தில் வீடியோவாக வெளியிட அதை சமூக வலைத்தள ரசிகர்களும் வைரலாக்கினர். நெரிசலான பயணத்தை நெகிழ்ச்சியாக மாற்றிய அந்த வீடியோ 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் விரும்பப்பட்டு, 20 லட்சத்துக்கும் மேலானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது.